அமித்ஷாவின் அடியாள்தான் மகாராஷ்டிர ஆளுநர்- காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

0

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி சரியான முறையில் தனது கடமையை செய்யாமல், அமித்ஷாவின் அடியாளைப் போல அவர் செயல்பட்டிருக்கிறார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பாஜக அரசு மகாராஷ்டிரா-வில் பொறுப்பேற்றது குறித்து அடுக்கடுக்கான கேள்விகளையும் ரன்தீப் சிங் எழுப்பியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ஆட்சி மகாராஷ்டிராவில் நீக்கப்பட வேண்டும் என்றும், புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு எப்போது முடிவுசெய்தது..? குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்குவது தொடர்பாக மத்தியஅமைச்சரவைக் கூட்டம் எப்போது நடைபெற்றது..? அதில் யார் பங்கேற்றார்கள்? குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் யார் கூறியது..?

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை ரத்து செய்யவேண்டும் என்று எந்த நேரத்தில் மத்திய அமைச்சரவை ஆளுநருக்கு கடிதம் அனுப்பியது..? அந்த கடிதத்தை ஆளுநர் எப்போது ஏற்றுக் கொண்டார்..? பதவியேற்க வருமாறு தேவேந்திர பட்னாவீஸுக்கும், அஜித் பவாருக்கும் ஆளுநர் கோஷ்யாரி எப்போது அழைப்பு விடுத்தார்..? தேவேந்திர பட்னாவீஸுக்கு ஆதரவாக எத்தனை பாஜக – தேசியவாத காங்கிரஸ் எம்எ.ல்.ஏ-க்கள் உள்ளனர்..? ஒருமணி நேரத்திற்கு உள்ளாக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் சரிபார்த்து விட்டாரா..?

மகாராஷ்டிராவின் தலைமை நீதிபதியை பதவியேற்புக்கு அழைக்கப்படவில்லையே.. என்ன காரணம்? உறுதிமொழி ஏற்பு நடைபெற்ற போதிலும், எப்போது பட்னாவீஸ் அரசு அமைப்பார் என்பது குறித்து ஆளுநர் ஏன் எதுவும் சொல்லவில்லை..? இவ்வாறு ரன்தீப் சிங் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Comments are closed.