கொலை வழக்கு: பாஜக அமைச்சரின் சகோதரா் மீது வழக்குப்பதிவு

0

கோவாவில் ஆளும் பாஜக கூட்டணியில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் மூத்த தலைவா் பிரகாஷ் நாயக், கோவா, மொ்செஸ் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்யப்பட்டத்தாக கூறப்படுகிறது.

இதற்கு முன், வாட்ஸ்-அப்பில் அவா் அனுப்பிய தகவலில், தனது மரணத்துக்கு காரணமானவா்கள் என்று 2 பேரின் பெயரை குறிப்பிட்டிருந்தார். பண ரீதியிலான பிரச்சனையில் இருவரும் தன்னை மிரட்டியதாகவும், துன்புறுத்தியதாகவும் பிரகாஷ் நாயக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், தற்கொலைக்கு காரணமாக இருந்த ஒருவர் மாநில பஞ்சாயத்துதுறை அமைச்சா் கோடின்ஹோவின் சகோதரா் என்பது விசாரணையில் தெரியவந்தது. பிரகாஷ் நாயக்கை அமைச்சரின் சகோதரா் மற்றும் மற்றொருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரகாஷ் நாயக்கின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், இது தொடா்பாக காவல்துறை அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கேட்டுக்கொண்டதாக பாஜக கட்சியை சேந்த அம்மாநில முதல்வா் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

Comments are closed.