மும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது!

0

மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த மளிகை பொருட்களை முஸ்லீம் டெலிவரி நபரிடமிருந்து வாங்க மறுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது பொருட்களை வாங்க மறுத்தவர் மீது மத நம்பிக்கைகளை சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த கான்ஷியாம் சதுர்வேதி என்பவர் கொரோனா சமயத்தில் அத்தியாவசிய பொருட்களை வீட்டில் டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றில் மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார். பின்னர் ஏப்ரல் 21ஆம் தேதியன்று காலை பொருட்கள் அவரது இல்லத்திற்கு வந்துள்ளது.

ஆனால், சதுர்வேதி டெலிவரி நபர் உஸ்மான் படேல் இடமிருந்து அந்த பொருட்களை வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போதே, முஸ்லீம் நபரிடம் டெலிவரி கொடுத்து விடக்கூடாது என்று தான் குறிப்பிட்டு கூறியதாகவும் அவர் விவாதம் செய்துள்ளார்.

அனைத்தையும் தனது செல்போனில் பதிவு செய்த உஸ்மான், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சதுர்வேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.