முஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது

0

சென்னை தி.நகரில் உள்ள ஜெயின் பேக்கரிஸ் & கன்ஃபெக்‌ஷனரிஸ் என்ற பேக்கரி, ராஜஸ்தானி ஹோம்மேட் வீட்டுத் தயாரிப்பில் பேக்கரி பொருட்கள் செய்து தரப்படும் என்று விளம்பரம்படுத்தியுள்ளது.

அந்த விளம்பர அட்டையின் மேல் பகுதியில் ஆர்டரின் பேரில் பொருட்கள் ஜெயின்களால் தயாரிக்கப்படுகிறது. முஸ்லிம் இங்கு பணியாற்றுவது இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம், சமூக வலைதலங்களில் பரவவியதை அடுத்து, இது இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை கொண்டிருப்பதாக புகார்கள் எழுந்தன.

இதனை அடுத்து பேக்கரியின் சர்ச்சை விளம்பரம் இஸ்லாமிய வெறுப்பைக் கொண்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து அந்த பேக்கரியின் உரிமையாளர் காவல்துறையால் கைது செய்யபப்பட்டுள்ளார். அவர்மீது கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஆத்திரமூட்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Comments are closed.