மேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்

0

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மேற்கு வங்கம் மாநில முர்ஷிதாபாத் பகுதி முஸ்லிம்கள் அப்பகுதியில் ஊர் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக சாப்பாட்டிற்கு வழியின்றி நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்து கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் ஊர் திரும்பும் மக்கள் பலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு இன்றிருப்பதாக மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்ட இமாம்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனை அறிந்த மாவட்ட தலைமை இமாம், 6200 இமாம்களுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அப்பகுதி உள்ளூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்ற இமாம்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் ஊர் திரும்பும் மக்களை தடுத்து நிறுத்தி அவர்களை தனிமை படுத்தலுக்காக வசதி ஏற்படுத்தி கொடுத்தனர்.

வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும் அவ்வாறு சென்றால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாகவும் தனிமைப்படுத்தல் காலம் முடிந்து உறவினர்களை சந்திக்கலாம் என்றும் இமாம்கள் வலியுறுத்தினர். மேலும் அவர்களை கண்காணித்தும் வருகின்றனர்.

சிலர் அவரவர்களின் வீட்டுக்கு அருகிலேயே குடிசைகள் அமைத்து தனியாக தங்கும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு உணவும் இமாம்ளால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது

ஒரு சில மக்களுக்கு ஏற்கனவே கொரோனா குறித்த விழிப்புணர்வு உள்ளதால் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

இமாம்களின் இந்த முயற்சியை முர்ஷிதாபாத் மாவட்ட நிர்வாகம் பாராட்டியுள்ளது.

Comments are closed.