பாஜகவை வீழ்த்தி மைசூர் மேயரான முஸ்லிம் பெண் வேட்பாளர்

0

கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதள கட்சிகள் போட்டியிட்டன.

மேயர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பெண் வேட்பாளராக தஸ்னீம் மற்றும் துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் ஸ்ரீதர் போட்டியிட்டனர். பாஜக சார்பில் மேயர் பதவிக்கு கீதாஸ்ரீ யோகானந்த் மற்றும் துணை மேயர் பதவிக்கு சந்தாமா வடிவேலு ஆகியோர் போட்டியிட்டனர்.

மொத்தம் உள்ள 70 ஓட்டுகளில் தஸ்னீம் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் 47 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றனர். எதிர்த்து போட்டியிட்ட பாஜக கீதாஸ்ரீ யோகானந்த் மற்றும் சந்தாம்மா வடிவேலு ஆகியோர் 23 ஓட்டுக்களை மட்டுமே பெற்றனர்.

இதனையடுத்து 31 வயதான பெண் மேயர் தஸ்னீம் மைசூரின் 33வது மேயராக பொறுப்பேற்க உள்ளார். மேலும்  மைசூரின் முதல் பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.