அலிகாரில் முஸ்லிம் குடும்பம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல்!

0

உத்தர பிரதேச மாநிலம், அலிகார் ரயில் நிலையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இஸ்லாமியர்கள் மீது இந்துத்துவா கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து ரயில் நிலைய காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், ‘தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கான்பூரிலிருந்து, அலிகார் ரயில் நிலையத்திற்கு மாலை 4:30 மணியளவில் குடும்பத்துடன் வந்த முஸ்லிம்கள் மீது பத்துக்கும் மேற்பட்ட இந்துத்துவா கும்பல் ரயில் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிவிட்டனர்.

இதில் கான் என்பவரின் மருமகன், தௌஃபிக் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இவர்கள் அலிகார் பல்கலைகழக மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய, அடையாளம் தெரியாத கும்பல் மீது, 147, 352 மற்றும் 394 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அடையாளம் காண சிசிடிவி கேமரா மூலம் ஆராய்ந்து அந்த கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுகப்பட்டுள்ளாதாக” தெரிவித்தனர்.

Comments are closed.