இந்தியாவில் உள்ள சிறைகளில், இதர வகுப்பினர்களிடயே ஒப்பிடுகையில் முஸ்லீம்கள் மற்றும் தலித்துகள் அதிகளவில் இருப்பதாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டின் தகவலின்படி, குற்றவாளிகளைவிட விசாரணைக்கைதிகளாக அதிகளவில் முஸ்லீம்கள் சிறையில் தவித்து வருகின்றனர்.
2019ம் ஆண்டின் தகவலின்படி, நாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் 21.7 சதவீதத்தின் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். விசாரணைக்கைதிகளாக 21 சதவீத தாழ்த்தப்பட்டோர் உள்ளனர். 2011ம் ஆண்டில் நிகழ்த்தபட்ட கணக்கெடுப்பில், இது 16.6 சதவீதமாக இருந்தது.
இந்திய மக்கள்தொகையில் 14.2 சதவீதம் உள்ள முஸ்லீம்களில், 16.6 சதவீதம் பேர் குற்றவாளிகளாகவும், 18.7 சதவீதத்தினர் விசாரணை கைதிகளாகவும் சிறைகளில் உள்ளனர்.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, முஸ்லீம் மக்களில், 2015ம் ஆண்டில் 20.9 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும், 15.8 சதவீதத்தினர் குற்றவாளிகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். 2019ம் ஆண்டில் இதன் சதவீதம் 18.7 மற்றும் 16.6 சதவீதமாக உள்ளது.
முஸ்லீம்கள் விசாரணை கைதிகளாக அதிகம் உள்ள மாநிலங்கள் உத்தரபிரதேசம் (21,139), பீகார் (4,758), மத்தியபிரதேசம் (2,947).
தலித்கள் விசாரணை கைதிகளாக அதிகளவில் உள்ள மாநிலங்களில் உத்தரபிரதேசம் (17,995), பீகார் (6,843), பஞ்சாப் (6,831)
முஸ்லீம்கள் குற்றவாளிகளா அதிகம் உள்ள மாநிலங்களில் உத்தரபிரதேசம் (6,098), மேற்குவங்கம் (2,369), மகாராஷ்டிரா (2,114).
தலித்கள் அதிகளவில் குற்றவாளிகளாக உள்ள மாநிலங்களில் உத்தரபிரதேசம் (6,143), மத்திய பிரதேசம் (5,017), பஞ்சாப் (2,786)