கொரோனா: குறிப்பிட்ட மதத்தை வேண்டுமென்றே குறை கூற கூடாது -சரத் பவார்

0

டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாஅத் மாநாடு நடத்த அனுமதி அளித்தது யார்? என்று தேசியவாத  காங்கிரஸ் தலைவர் சரத் பவார்  கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மாதத்தில் மகாராஷ்டிரத்தில் இரு இடங்களில் இதே போன்ற மாநாடு நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதி அளிக்கப்படாத நிலையில் மாநாடு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைப்பாளர்களுக்கு மகாராஷ்டிர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

அதேவேளையில் டெல்லியில் மாநாடுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார். கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா சீனா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. நிலைமையின் தீவிரத்தை உணராமல் அனுமதி அளித்தது யார்? அதே நேரத்தில் இந்த பிரச்சனையை வைத்து குறிப்பிட்ட மதத்தை வேண்டுமென்றே குறை கூற கூடாது என்றார்.

ஊடகங்கள் இந்த விவகாரத்தை மட்டும் ஏன் ஊதி பெரிது படுத்த என்ன தேவை இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

Comments are closed.