முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளிடமிருந்து பறிக்கப்படும் வாக்கு உரிமை

0

மகாராஷ்டிராவில் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஜனதா தளம் (மதச்சார்பின்மை) வெள்ளிக்கிழமை கூறியது. அரசியல் ஆதாயங்களுக்காக “பா.ஜ.க. இவ்வாறு சதித்திட்டமிட்டுள்ளது.

கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஜி.கோல்சே பாட்டீல் ஹைதராபாத் நிறுவனத்தில் நடத்திய ஆய்வு ஒன்றின்படி, மொத்த வாக்காளர்களில் 39,27,882 அதாவது 4.6 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து காணாமல் போயுள்ளனர்.

மேலும் 39,27,882 பெயர்களில் 17 லட்சம் வாக்காளர்கள் தலித்துகள், 10 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். இது அரசியல் ஆதாயங்களுக்காக பா.ஜ.க. வின் சதித்திட்டம் என பாம்பே உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான கோல்சே பாட்டீல் செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.

காணாமல் போன வாக்காளர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்காக, காணாமல் போன வாக்காளர்களை கண்டறியும் மொபைல் ஆப்-இன் நிறுவனர் மற்றும் ஐ.டி. பொறியாளர் காலித் சைபுல்லாவால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போகும் வாக்காளர்களில் மூன்று கோடி முஸ்லீம்கள் உட்பட, நாட்டில் சுமார் 12.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று அவர் கூறினார்.

மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் 69 தொகுதிகளில் அவரது அணி ஆய்வு நடத்தியது.

நீதிபதி கோல்சே பாட்டீல் கூறுவதாவது: இந்த குறைபாடுகளை நீக்குவதற்கு நேரம் இன்னும் உள்ளது. ஆகையால் தேர்தல் ஆணையம் விடுபட்ட வாக்காளர்களை, வாக்காளர்களர் பட்டியலில் இணைக்க தயார் செய்ய வேண்டும் என்றார்.

இதனையடுத்து, இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு, மாநிலத் தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுக்க ஒரு இயக்கம் மேற்கொள்ள வேண்டும், இல்லையெனில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் தங்கள் உரிமையை இழக்க நேரிடும்,” என்று காலித் சைபுல்லா கூறினார்.

Comments are closed.