முசாஃபர்நகர் கலவரம்: இந்துத்துவ பயங்கரவாதிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறும் உ.பி. அரசு

0

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் ஏற்பட்ட கலவர வழக்கில் தொடர்புடைய 3 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற யோகி ஆதித்யநாத் அரசு முடிவெடுத்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் பகுதியில் இந்துத்துவ பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது  தக்குதல் நடத்தி கலவரத்தில் ஈடுபட்டனர். அதில் 65 பேர் கொல்லப்பட்டனர். மேலும் கலவரத்தின் காரணமாக சுமார் 40 ஆயிரம் பேர் அப்பகுதியில் இருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக அதலைவர்கள் உட்பட மொத்தம் 510 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 175 குற்றப்பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த வன்முறை சம்பவத்தைத் தூண்டும் விதமாக வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டதாக பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கீத் சோம், சுரேஷ் ராணா மற்றும் கபில் தேவ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜக தலைமையிலான காப்செளதரி என்ற இந்துத்துவ குழு லக்னோவில் உ.பி- முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து, கலவரத்தில் ஈடுபட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள்  மீதான வழக்குகளை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்பப பெறுவதற்கான நடவடிக்கையை உத்தரப்பிரதேச பாஜக அரசும் தீவிராமாக மேற்கொண்டுள்ளது.

Comments are closed.