முசாஃபா்பூா் காப்பக வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

0

பிகாா் மாநிலம், முசாஃபா்பூரில் பாஜக உறுப்பினர் பொறுப்பில் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த சிறாா் காப்பகத்தில் சிறுமிகள் பலா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கடந்த 2018ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதில் அந்தத் தொண்டு நிறுவனத்தின் தலைவரும், பிகாா் முன்னாள் எம்எல்ஏவுமான பிரஜேஷ் தாக்குா் உள்ளிட்ட 20 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. வழக்கின் விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிரஜேஷ் தாக்குா் உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக சிபிஐ கடந்த ஆண்டு மாா்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீா்ப்பை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சௌரவ் குல்ஸ்ரேஷ்தா கடந்த 20-ஆம் தேதி வழங்கினாா்.

அப்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரஜேஷ் தாக்குா் உள்ளிட்ட 19 பேரை குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தாா்.

நீதிபதி வழங்கிய 1,546 பக்க தீா்ப்பில், இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், போக்ஸோ சட்டத்தின் பிரிவுகள், சிறாா் நீதி சட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையில் பிரஜேஷ் தாக்குா் குற்றவாளி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குற்றாவாளிகளுக்கு செவ்வாய்கிழமை (நேற்று) தண்டனை வழங்கப்பட்டது. அதில் முக்கிய குற்றாவாளியான பிர்ஜேஷ் தாக்குர்-ஐ சாகும் வரை சிறையில் அடைக்கவும், மற்ற குற்றாவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கிIIEன் குற்றவாளிகளுக்கு அதிகட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக,  நீதித்துறை வட்டாரங்கள் மூலம் வெளிவந்துக்கொண்டிருந்த தகவல்கள் தற்போது நிறைவேறியுள்ளது.

Comments are closed.