மியான்மரில் பதற்றம்: துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் உயிரிழப்பு

0

மியான்மரில், ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர்.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த பொதுதேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சியை மியான்மர் ராணுவம் கவிழ்த்தது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனை தொடர்ந்து யாங்கூன் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 38 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

2017ஆம் ஆண்டில் சூகியின் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல்களால் 7 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி ரோஹிங்கிய முஸ்லிம்கள் அகதிகளாகினர். அந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலை உலகையே அதிர வைத்த சம்பவம். பல லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக நாட்டைவிட்டு சென்றனர். அகதிகளாகிய பல்லாயிரக்கணக்கானோரை மியான்மர் ராணுவம் கொன்று குவித்தது. அவர்கள் பங்களாதேஷ் வழியாக ஊடுருவியவர்கள் என்று கூறி அவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க துடித்தது சூகியின் ராணுவம் என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.