இந்தியாவில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர் -ஆய்வின்றி உளரும் பாஜக அரசு

0

ரோஹிங்கியா முஸ்லிம்கள் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்துவருவதாக மாநிலங்களவையில் பாஜக அரசு தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் இணையமமைச்சர் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், “சட்டவிரோதமாக குடியேறியவர்கள்ஆவணங்களின்றி ரகசியமாக நுழைகின்றனர். இதனால் நாட்டில் இதுபோன்ற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை குறித்து துல்லியமான தகவல்கள் இல்லை.

சட்டவிரோதமாக குடியேறியுள்ள ரோஹிங்கியாக்கள் தற்போது இந்தியாவில் பெரும்பாலும் ஜம்மு-காஷ்மீர், தெலங்கானா, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸா

ம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தங்கியுள்ளனர்.

தேசிய குடியுரிமை பதிவேடு சரிபார்ப்பு செய்யப்பட்ட பிறகு ரோஹிங்கியா முஸ்லிம்கள் உட்பட சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

Comments are closed.