மியான்மரில் பதற்றம்: சமூக வலைதளம் பயன்படுத்த கட்டுப்பாடு

0

மியான்மரில் ராணுவத்தினரால் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்திலிருந்த ஆங் சாங் சூகி உட்பட முக்கிய அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவ சதி திட்டத்தை தொடர்ந்து நாட்டின் நிலைமை நிலையற்று பதற்றமாக இருப்பதால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 7ஆம் தேதி ஆட்சி மாற்றம் வரை ஃபேஸ்புக் தற்காலிகமாக மியான்மரில் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர்  ராணுவத்தை பற்றிய தகவல்கள் பகிரப்பட்டு வருவதால், மியான்மரில் ஃபேஸ்புக் உபயோகிக்க அந்நிறுவனம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஃபேஸ்புக் மட்டுமல்லாமல் புகைப்படத்தை பகிரும் செயலியான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டருக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.