ரோஹிங்கிய முஸ்லிம்கள் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூகி!

0

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை சர்வதேச நீதிமன்றத்தில் 57 இஸ்லாமியக் கூட்டுறவு நாடுகளின் சார்பில் கேம்பியா வழக்கு தொடர்ந்துள்ளதாக அந்நாடு தெரிவித்திருந்தது.

ஐ.நா.வின் இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையை மியான்மர் மீறியுள்ளது என்றும் மியான்மர் ராணுவத்தின் ஒடுக்குமுறைகளால் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அகதிகளாக விரட்டப்பட்டனர் என்றும் கேம்பிய தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டில் மியான்மர் ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்களால் 7 லட்சத்து 40 ஆயிரத்துக்கு அதிகமான அப்பாவி  ரோஹிங்கிய மக்கள் வங்கதேசத்தில் உள்ள முகாம்களை நோக்கித் தப்பி ஓடினர். இதனை ஐ.நா. விசாரணையாளர்கள் இன அழிப்புச்செயல் என்றே குறிப்பிடுகின்றனர்.

“மியான்மர் இனப்படுகொலை நடவடிக்கைகளைக் கைவிட்டு, குற்றம் புரிந்தவர்களைத் தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ரோஹிங்கியர்களுக்கு இழப்பீடும் அளிக்க வேண்டும்.” என உத்தரவிடுமாறு சர்வதேச நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டிருப்பதாக கேம்பியா நீதித்துறை அமைச்சகம் குற்றியுள்ளது.

ரோஹிங்கியா முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்ததன் காரணமா, நெதர்லாந்து நாட்டிலுள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு ஆங் சான் சூகி ஆஜர் ஆகியுள்ளார்.

இனப்படுகொலை வழக்கின் வாதங்களை, சர்வதேச நீதிமன்றத்தின் 16 ஐ.நா நீதிபதிகளால் விசாரிக்கவுள்ளது. இந்த விசாரனை வரும் 10ம் தேதி முதல் 12 வரை நடைபெறும். இந்த விசாரணை சர்வதேச நீதிமன்றத்தின் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

Comments are closed.