நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்!

1

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைய முயன்ற பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும்  குர்மீத் ராம் ரஹீம் ஆதரவாளரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்na

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கக்கூடிய ஒன்று. இந்நிலையில் நேற்று காலை பைக்கில் வந்த ஒருநபர் கேட் எண் 1 வழியாக “ராம் ரஹிம்” என்று கோஷம் எழுப்பிக்கொண்டு உள்ளே நுழைய முயன்றுள்ளார்.

இதனை அடுத்து, போலீசார் அந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த நபர் கத்தி வைத்துள்ளார். பின்னர், அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பிறகு, பிடிபட்ட நபர் டெல்லி லக்‌ஷ்மி நகரில் வசிக்கும் சாகர் இன்ஸா என்று தெரியவந்துள்ளது. பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் டேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர் என்றும் தெரியவந்துள்ளது. குர்மீத் ராம் ரஹீம் தற்போது, பாலியல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Discussion1 Comment

  1. இதே முஸ்லிமா இருந்தா நாடுமுழுவதும் நாறடிச்சிருப்பானுவ