காந்திக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு!

0

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்து மகாசபை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக நாதுராம் கோட்சேவை வணங்கி வருகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு குவாலியரில் அவரது சிலையை நிறுவ முயன்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அந்த சிலையை கைப்பற்றி சிலை நிறுவுவதற்கு தடை விதித்தது.

இந்நிலையில், நாதுராம் கோட்சேவின் 70 வது இறந்த நாளில்’ அவரது ஆர்வலர்கள் கோட்சேவை வணங்கியதோடு, மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் தோட்டீஸ் விநியோகித்துள்ளனர். இதையடுத்து மத்திய பிரதேச காவல்துறையினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் ஆர்வலர் ரவீந்திர சௌஹான் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துண்டு பிரசுரங்களை விநியோகித்த நபர்களை கைது செய்யும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.