CAA எதிர்ப்பு போராட்டத்தால் அஸ்ஸாம் செல்ல அச்சப்படும் நரேந்திர மோடி..!

0

கவுகாத்தியில் வரும் 10ஆம் தேதி நடைபெறும் இந்திய இளைஞர் விளையாட்டு துவக்க விழாவை நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அஸ்ஸாம் மாநிலத்தில் போராட்டம் கடுமையாக உள்ளது.

மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சியினர் என பலரும் போராடி வருகின்றன. அம்மாநில பாஜகவும் இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறது.

இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் வரும் 10ஆம் தேதி நடைபெற இருந்த இந்திய இளைஞர் விளையாட்டு விழாவை ரத்து செய்துள்ளார் நரேந்திர மோடி. அன்றைய தினம் அவ்விழாவை மோடி துவக்கிவைத்து உரையாற்றுவார் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அம்மாநிலத்தில் மோடிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் எதிராக எழுந்துள்ள போராட்டத்தால்  விளையாட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.  மேலும் விளையாட்டு விழாவுடன், தொடக்கி வைக்க இருந்த கண்காட்சி விழாவையும் மோடி ரத்து செய்திருக்கிறார்.  இதன் மூலம், அஸ்ஸாம் மாநிலத்தில் மோடி ரத்து செய்யும் 2வது நிகழ்ச்சியாகும் இதுவே ஆகும்.

Comments are closed.