5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி: ரூபாய் 517 கோடி வீணடித்ததாக எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

0

பிரதமா் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ரூ.517. 82 கோடி செலவாகியுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் மாநிலங்களவையில் அளித்த பதிலில், ‘பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2015 முதல் ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளாா். வெளிநாட்டுப் பயணத்திற்கு ரூ. 517.82 கோடி செலவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணங்களின் போது இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களின் விவரங்களுடன் 2015 மாா்ச் முதல் 2019 நவம்பா் வரை மோடி பாா்வையிட்ட நாடுகளையும் அமைச்சா் பட்டியலிட்டுள்ளாா்.

இதில், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு மட்டும் பிரதமா் 5 முறை பயணித்துள்ளாா். இது தவிர சிங்கப்பூா், ஜொ்மனி, பிரான்ஸ், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.

சுய விளம்பரம் மற்றும் சுயபடம் எடுப்பதற்காக நரேந்திர மோடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டாா். பொதுமக்களின் பணத்தை அவா் வீணடித்து வருகிறாா்’ என்று எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.