நரோடியா பாட்டியா கலவர குற்றவாளிகள் நால்வருக்கு பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம்

0

நரோடியா பாட்டியா கலவர குற்றவாளிகள் நால்வருக்கு பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம்

2002 குஜராத் நரோடா பாட்டியா கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உமேஷ்பாய் பரத்வாட், ராஜ்குமார், ஹர்ஷத் மற்றும் பிரகாஷ்பாய் ரதோட் ஆகியோருக்கு கடந்த 22 ஆம் தேதி நீதிபதி A.M.கான்வில்கர் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் போது இவர்கள் குற்றவாளிகள் என்று குஜராத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவாதத்திற்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்ற பெஞ்ச் தெரிவித்துள்ளது.

2002 நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது நரோடா பாட்டியா பகுதியில் சுமார் 97 முஸ்லீம்கள் இந்துத்வாவினரால் கொலை செய்யப்பட்டனர். இந்த கலவர வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், இந்த நான்கு பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இத்துடன் பாபு பஜ்ரங்கி உட்பட 16 நபர்கள் குற்றவாளிகள் என்று உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டனர்.தற்போது இந்த நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

முன்னதாக குஜராத் உயர்நீதிமன்றம் மாயா கோட்னானி உட்பட 17 நபர்கள் அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.