4 மாத குழந்தையை இழந்தும் CAA எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற தாய்

0

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலிய பல்கலை கழக அருகிலுள்ள ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஷாகின் பாக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நடைபெற்றுவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் CAA-NRC-NPR போன்ற பாசிச பாஜக அரசின் சட்டங்களை எதிர்த்து வலுவான பேராட்டத்தை நடத்தி வருவதால் நாடு முழுவதும் பெரும் கவத்தை ஈர்த்துள்ளது.

நசியா-ஆரீஃப் அவர்களது 4 மாத கைக்குழந்தையான ஜஹான் கான்-ஐயும் போராட்டத்திற்கு கொண்டுவந்து போராட்டத்தில் பங்கேற்று தேசியக் கொடியை கையில் ஏந்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டு உறங்குவதற்காக நசியா மற்றும் அவரது கணவர் குழந்தையுடன் வீடு திரும்பினர். காலையில் எழுந்து பார்த்தபோது குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தது.  அதிர்ச்சி அடைந்த நசியாவும், அவரது கணவர் ஆரீஃப்பும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பனியின் காரணமாக கடுமையான காய்ச்சலுக்கு ஆளான குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது நசியா மற்றும் ஆரிப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும் இதனை அவர்கள் யாரிடமும் சொல்லாமல் சோகத்தை தங்களுக்குள்ளையே வைத்துக் கொண்டனர்.

குழந்தை ஜஹான்கான் இறந்து ஒருவாரம் மட்டுமே ஆன நிலையில், அக்குழந்தையின் தாயார் நசியா, வழக்கம்போல ‘ஷாகீன் பாக்’ போராட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது, குழந்தை ஜஹான்கான் எங்கே? என்று அங்கிருந்தவர்கள் கேட்க, நடந்தவற்றை உருக்கமாக நசியா கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர் சக போராட்டக்காரர்கள். பின்னர் நசியாவின் கைகளைப் பிடித்து, தங்களின் நட்பையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.

Comments are closed.