CAA-க்கு எதிராக போராட்டம்: போலிஸ் வேடமிட்டு மாணவர்களை தாக்கிய கும்பல் கைது

0

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்து அரசு சொத்துக்களை நொருக்கியவர்களை கைது செய்துருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட மர்ம கும்பலை கலைக்க மட்டுமே தடியடி மற்றும் கண்ணீா்ப்புகை குண்டுகளை பயன்படுத்தியதாகவும், மாணவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதும், மாணவர்கள் மீது கடுமையான அடியடி நடத்திய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளிவந்தது. காவல்துறையின் கொடூரத் தாக்குதலால் காயமடைந்த பல மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், காவல்துறை மாணவர்களை தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்திற்கு அருகிலுள்ள காலனியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றப்பின்னணி கொண்ட 10 பேர்-ஐ கைது செய்துருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.

தாக்குதலின்போது காவல்துறை கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவா அமைப்பினர் ஊடுறுவி மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாகவும் பல்கலை கழக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Comments are closed.