விவசாயிகளை மிரட்டி வழக்குப்பதிவு செய்யும் NIA: மோடி அரசுக்கு கடும் கண்டனம்

0

தேசிய புலனாய்வு முகமையை (National Investigation Agency – NIA) ஏவ, விவசாயிகள் ஒன்றும் தேச விரோதிகள் இல்லை என்று சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல்  தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ‘சீக்கியர்களுக்கு நீதி’ (Sikhs for Justice – SFJ) என்ற அமைப் பின் தலைவர் குர்பட்வந்த் சிங் பன்னு, விவசாயிகள் சங்கத் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா, பஞ்சாபி நடிகர் தீப் சித்து உள்பட 40 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப்பதிவு செய்துள்ளது. விசாரணைக்கு வருமாறு சம்மனும் அனுப்பியுள்ளது.

இதற்கு மோடி அரசை கண்டித்து, சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல் டிவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“விவசாயிகள் சங்க தலைவர்களையும், விவசாயிகளுக்கு ஆதரவானவர்களையும் மத்திய பாஜக அரசு, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை மூலம் மிரட்டி வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. விவசாயிகள் ஒன்றும் தேச விரோதிகள் அல்ல. 9-ஆவது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பின் பாஜக அரசு இதுபோன்ற செயல்கள் மூலம் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கலைத்துவிடுவார்கள் என்று நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது” என்று பாதல் கூறியுள்ளார்.

Comments are closed.