NCHRO சார்பில் செயல்பாட்டாளர்களுக்கான மனித உரிமைப் பயிலரங்கம்

0

பேரா. அ.மார்க்ஸ் தலைமையில் சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்றத மனித உரிமை பயிலரங்கம்.

 

சென்னை, ஆகஸ்ட் 5: மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO) சார்பாக கடந்த வாரம் ஜூலை 30, 31 ஆகிய இரு தினங்கள் சென்னை நிருபர்கள் சங்கத்தில் செயல்பாட்டாளர்களுக்கான மனித உரிமைப் பயிலரங்கம் நடைபெற்றது.

 

என்.சி.ஹெச்.ஆர்.ஓ.வின் தேசியத்தலைவர் பேரா. அ.மார்க்ஸ் தலைமையேற்று இப்பயிலரங்கைத் துவக்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் என்.எம். ஷாஜஹான் வரவேற்புரையாற்றினார். தேசியச்செயலாளர் வழக்கறிஞர் ஏ. முகமது யூசுப் அறிமுக உரை நிகழ்த்தினார். மாநில துணைத்தலைவர் இப்ராஹிம் பாதுஷா முன்னிலை வகித்து பயிலரங்கத்தை ஒருங்கிணைத்தார். தேசிய ஒருங்கிணைப்பாளர் முகமது ஜானிப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

 

“இந்தியாவில் மனித உரிமைகளின் நிலையும் மனித உரிமைச் செயல்பாட்டின் அவசியமும்””, சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் 1948””, எப்.ஐ.ஆர். முதல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரை: ஆவணப்படுத்துதலும் நடைமுறையும், “மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துதலும், குடிமக்களுக்கெதிரான காவல்துறையினரின் சட்டத்திற்கெதிரான செயல்பாடுகளும்”,”தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஓர் ஆயுதம்”, “உண்மை கண்டறிதலில் நெறியாளுகை, “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டமும்பெண்ணுரிமைப் பாதுகாப்பும்”, “ஊடகங்களும் மனித உரிமைகளும்”, “மனித உரிமைச் சட்டங்களின் நடைமுறையும் பயிற்சியும்,தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களின் பணிகளும் செயல்பாடுகளும்”, “எவ்வாறு உறுதிமிக்க மனித உரிமைப் போராளியாக செயல்படுவது”” ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் எடுக்கப்பட்டன.

4 - 3 Adv. Yusuff is taking class

பேரா. அ.மார்க்ஸ், மாநிலத்தலைவர் வழக்கறிஞர் பவானி பா. மோகன், தேசியச்செயலாளர் ரெனி அய்லின், சென்னையைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி கிருஷ்ணவேணி, வழக்கறிஞர் ஏ. முகமது யூசுப், மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் (பி.யூ.ஹெச்.ஆர்.) மதுரை மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் ரஜினி, சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பீர்முகம்மது, மனித உரிமைப் போராளியும் மதுரை உயர்நீதி மன்றக் கிளை வழக்கறிஞருமான கருணாநிதி, தேசிய துணைத்தலைவர்வழக்கறிஞர் கே.பி. முஹம்மது ஷரீஃப் ஆகியோர் உரையாற்றினர். ரெனி அய்லினின் ஆங்கில உரையை தேசிய செயற்குழு உறுப்பினர் தன்வீர் மற்றும் கே.பி. முஹம்மது ஷரீஃபின் ஆங்கில உரையை மாநில இணைச்செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஏ.எஸ். அலாவுதீன் ஆகியோர் மொழிபெயர்ப்பு செய்தனர்.

 

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் M.ஷேக் முஹம்மது அன்சாரி வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக, என்.சி.ஹெச்.ஆர்.ஓ. தமிழக கிளையின் மக்கள் தொடர்பு அலுவலர் (பி.ஆர்.ஓ). வழக்கறிஞர் ஏ. சையது அப்துல் காதர் நன்றியுரை கூற, இரண்டு நாட்கள் நடந்த பயிலரங்கம் இனிதே நிறைவு பெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 53 மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் இப்பயிலரங்கில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

 

இப்படிக்கு

வழக்கறிஞர் என்.எம். ஷாஜஹான்

மாநில பொதுச்செயலாளர்

என்.சி.ஹெச்.ஆர்.ஓ – தமிழ்நாடு

செல்: Mob: +91 94439-77943, 76675-17265

Comments are closed.