NDF தொண்டர் ஃபசலை கொலை செய்தது நாங்கள் தான்: ஆர்எஸ்எஸ் தொண்டன் வீடியோ வாக்குமூலம்

0

கேரள மாநிலம் கண்ணூரில் NDF(National Democratic Front) அமைப்பை சேர்ந்த ஃபசல் என்பவரை கொலை செய்தது தாங்கள் தான் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ ஒன்று கேரள மாநில ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

சுபீஷ் என்ற அந்த ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவரின் வாக்குமூலம் சிபிஐ நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஃபசல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட CPIM தலைவர் கராயி ராஜன் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.

இந்த வீடியோவில், கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரியில் வைத்து ஃபசலை நான்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எவ்வாறு கொலை செய்தனர் என்பது குறித்து சுபீஷ் கூறுவது பதிவாகியுள்ளது. தன்னுடன் அந்த கொலையில் ஈடுபட்ட ப்ரதீஷ், ப்ரமேச் மற்றும் சிநோய் ஆகிய மூன்று பேரின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த கொலையை செய்தபின் அவர்கள் அப்பகுதி ஆர்எஸ்எஸ் தலைவர் திலகனின் வீட்டிற்கு சென்றதாகவும் அங்கு இந்த தாக்குதல் சம்பவத்தைப் பற்றி கேள்வியுற்ற திலகன் சுபீஷை அறைந்ததாகவும் பின்னர் ஃபசலின் ரத்தம் படிந்த கொலை ஆயுதங்களை தன் வீட்டில் மறைத்து வைக்குமாறும், அதை பற்றி வேறு யாரிடமும் எதுவும் பேசவேண்டாம் என்றும் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஃபசலை எவ்வாறு இருவர் வாள்களால் வெட்டி கொலை செய்தனர் என்பது பற்றியும் அந்த வீடியோவில் சுபீஷ் விளக்கியுள்ளார்.

முன்னதாக 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் CPIM தொண்டர் படுவிலயி மோகனன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது இந்த கொலை தொடர்பான ஒப்புதல் வாக்குமூலத்தையும் அவர் கொடுத்திருந்தார்.

NDF தொண்டர் முஹம்மது ஃபசல்-ஐ கொலை செய்தது நாங்கள்தான்: ஆர்.எஸ்.எ.ஸ் தொண்டன் வாக்குமூலம்

.ஃபசலின் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை CPIM தலைவர் கராயி ராஜன் மற்றும் கராயி சந்திரசேகரன் ஆகியோரை கைது செய்திருந்தது. இது அக்கட்சிக்கு கண்ணூர் பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தியது. பின்னர் 2013 ஆம் ஆண்டு இந்த இருவர் கேரள உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும் இவர்கள் எர்னாகுளம் மாவட்டத்தை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்று இவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. காவல்துறையின் கூற்றுப்படி CPIM கட்சியை விட்டு விலகி NDF அமைப்பில் இணைந்து பணியாற்றியதால் அவர் இவர்களால் கொலை செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

சுபீஷ் கூற்றுப்படி கண்ணூர் பகுதியில் உள்ள முஸ்லிம்  மக்களிடையே CPM கட்சிக்கு பெருகிவரும் ஆதரவு ஆர்எஸ்எஸ் சங்பரிவார்களுக்கு பெரும் சவாலாக இருந்தது என்றும் அதனால் ஃபசலின் கொலை மூலம் முஸ்லிம் மக்களுக்கு CPM மேல் இருந்த நன்மதிப்பு கெட்டுப்போக அவர்கள் திட்டமிட்டதாக தெரியவருகிறது. ஆனால், காவல்துறையினர் தன்னை துன்புறுத்தியதால் தான் அப்படி ஒரு வாக்குமூலத்தை தான் அளித்ததாக சுபீஷ் மலையாள செய்தி தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இத்துடன் கண்ணூரின் பையனூர் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் மையத்தில் வாள்கள், வெடிகுண்டு ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அப்பகுதி மக்கள் இந்த மையத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் இந்த ஆயுதங்களை வைத்துள்ளனர் என்றும் இங்கு அவர்கள் அடிகடி கூட்டம் நடத்துகின்றனர் என்று காவல்துறையினரிடம் தெரிவித்ததை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு ஒன்றை பதிவு செய்து பையனூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று CPIM கட்சி வலியுறுத்தும் வேலையில் இது வெளியாட்களால் தங்களது பெயருக்கு களங்கம் விளைவிக்க இங்கு வைக்கப்பட்டுள்ளது என்று பாஜக ஆர்எஸ்எஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Comments are closed.