NDF தொண்டர் முஹம்மது ஃபசல்-ஐ கொலை செய்தது நாங்கள்தான்: ஆர்.எஸ்.எ.ஸ் தொண்டன் வாக்குமூலம்

0

அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி நடந்த கேரள கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் கே.மோகனன் கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சுபீஷ் எம்பரம்கண்டி என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 22  ஆம் தேதி கேரளாவின் National Development Front (NDF) அமைப்பை சேர்ந்த ஃபசல் என்பவரை தானும் தன்னுடன் சேர்ந்த பிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

ஃபசலை கொலை செய்த கும்பல் 2014 இல் பவித்ரன் என்பவரையும் கொலை செய்ததாக சுபீஷ் ஒப்புக்கொண்டுள்ளான். இவனின் இந்த வாக்குமூலம் ஃபசல் கொலை வழக்கில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

ஃபசல் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. இவ்வழக்கு தொடர்பாக  அப்பகுதி CPI(M) தலைவர்கள் கராயி ராஜன், கராயி சந்திரசேகரன் உட்பட  8 பேரை கைது செய்திருந்தது. சி.பி.ஐ யின் கூற்றுப்படி இந்த கொலை அரசியல் முன் விரோதம் காரணமாக நடைபெற்றுள்ளது என்றும் இந்த கொலையை ராஜன் மற்றும் சத்திரசேகரன் திட்டமிட பிறர் செய்துள்ளனர் என்றும் கூறியிருந்தனர். ஃபசல் முனந்தாக  CPI(M) கட்சியில் இருந்து பின்னர் NDF இல் இணைந்தவர் என்று சி.பி.ஐ. கூறியிருந்தது.

இது குறித்து காவல்துறையிடம் கருத்து கேட்ட போது, ஃபசல் கொலை வழக்கை சி.பி.ஐ  விசாரித்து வருவதால் அவ்வழக்கு தொடர்பாக சுபீஷ் கொடுத்த வாக்குமூலங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் பவித்ரன் கொலை தொடர்பாக விசாரிக்க அனுமதி வேண்டி அனுமதி கோரி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.