NDTV நிறுவனத்திற்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

0

பங்கு பரிவர்த்தனை குறித்த விவரங்களைப் பங்குச் சந்தையில் சமர்ப்பிக்காத குற்றத்துக்காக NDTV நிறுவனத்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

NDTV பிரபலமான தொலைக்காட்சி நிறுவனமாகும். இந்நிறுவனத்தைத் தொடங்கிய பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகிய இருவரும் பங்குப் பரிவர்த்தனையில் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு. இவர்கள் இருவரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை விதித்தது, பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி. இந்த நிலையில் தற்போது, பங்குப் பரிவர்த்தனை விவரங்களை முறையாக சமர்ப்பிக்காத குற்றத்துக்காக NDTV நிறுவனத்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பங்குப் பரிவர்த்தனை விவரங்களை மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தையில் NDTV நிறுவனம் சமர்ப்பிக்காமல் பங்குப் பரிவர்த்தனை விதிமுறைகளை மீறியது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தற்போது NDTV நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.