H.ராஜா மீது அவமதிப்பு வழக்கு இல்லை: சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.!

0

நடிகர் சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளில், குற்றவியல் அவமதிப்பை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி பிரதாப் சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“உயிருக்கு பயந்து காணொலி காட்சி மூலம் வழக்குகளை நடத்துகின்ற நீதிமன்றங்கள் கூட மாணவர்களை பயப்படாமல் தேர்வெழுத போகச் சொல்கிறது” என நீட் மரணங்கள் குறித்த தனது அறிக்கையில் சூர்யா தெரிவித்திருந்தார்.

சூர்யாவின் இந்த கருத்துக்கு எதிராக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் எழுதியுள்ள கடிதத்தில், “என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறை மதிப்புக்குட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிபடுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

பாஜகவின் H.ராஜா நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தியபோதும், S.V.சேகர் தேசிய கொடியை அவமதித்தபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிலர், தற்போது நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்காக கருத்து கூறிய நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்த உள்ளனர்.

அவமதித்தவர்கள் மீது வழக்கு தொடராமல் மக்களுக்கு கருத்து கூறியவர்கள் மீது வழக்கை தொடர்ந்து ஒடுக்க முடியற்சிப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply