நேதாஜிக்கு பதிலாக நேதாஜி பட நடிகரின் படத்தை திறந்து வைத்த குடியரசு தலைவர்

0

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 ஆண்டு விழா கடந்த நேற்றைய முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நேதாஷி உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. இந்த உருவப்படத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

ஆனால், அந்த படம், ஒரு நடிகரின் படம் என்று கூறப்படுகிறது. உண்மையான நேதாஜிக்கு பதிலாக சினிமாவில் நேதாஜியாக படத்தில் நடித்த நடிகரின் படம் திறந்து வைக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நேதாஜி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதையடத்து, நேதாஜியின் உருவப்படம் ராஸ்டிரபதி பவனில் திறக்கப்பட்டது. இந்த படத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

இந்த நிலையில், குடியரசு தலைவர் திறந்து வைத்த படம் உண்மையான நேதாஜியின் உருவப்படம் இல்லை என்று குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் செர்ந்த ஸ்ரீஜித் முகர்ஜி என்ற திரைப்பட இயக்குனர் இயக்கிய கும்னாமி என்ற படத்தில் நடித்த நடிகர் பிரசெந்ஜித் சாட்டர்ஜி என்பவர் நேதாஜியாக நடித்த படம் என்று கூறப்படுகிறது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவரான நேதாஜியின் உருவப்படம் எது என்றுகூட தெரியாத குடியரசுத் தலைவர், குடியரசு தலைவர் மாளிகையில் நடிகரின் புகைப்படத்தை  திறந்து வைத்துள்ளார்.

Comments are closed.