நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையில் பாஜக கொடி கட்டியதற்கு நேதாஜியின் பேரன் எதிர்ப்பு

0

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளான நேற்று நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடும் விதமாக சுதந்திரப் போராட்ட வரலாறுகளையும் நேதாஜியின் தியாகம் குறித்து பேச்சுக்கள் நடைபெற்றது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜ.கவினர், நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்ததோடு, அவரது சிலையின் கையில் பா.ஜ.க கொடியை கட்டிவிட்டனர். இதற்கு நேதாஜியின் பேரனும், பா.ஜ.க தலைவருமான சந்திர குமார் போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க கொடியேந்திய சுபாஷ் சந்திர போஸ் சிலையின் புகைப்படம் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினரின் இந்த செயலுக்கு, மேற்குவங்க பாஜக துணை தலைவரும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரனுமான சந்திர குமார் போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எந்த கட்சியும் நேதாஜியை சொந்தமாக்க முடியாது. அவரது சிலையில் கொடியை கட்டிய பா.ஜ.கவினரின் செயலை நான் கண்டிக்கிறேன். இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட மதத்தவரை விலக்கும் பணிகள் நடக்கின்றன. இதேநிலை தொடர்ந்தால், பாஜகவில் எனது எதிர்காலம் குறித்து மறுபரிசீலனை செய்யும் சூழல் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார். ” என சுபாஷ் சந்திரபோஸின் பேரனுமான சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.

மத பிரிவினையை ஏற்படுத்தும் பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை சந்திர குமார் போஸ் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், தற்போது பாஜகவில் தனது எதிர்காலம் பற்றி பேசியுள்ளதால் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.