சமூக செயல்பாட்டின் புதிய வடிவம்!

0
கோவிட் -19 தொற்றுநோய்க்கு முன்னர் உலகம் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மக்கள் திரள் போராட்டங்களை கண்டு வந்தது.  இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் குறிப்பாக எந்தவொரு காலகட்டத்தையும் விட 2010 முதல் 2019 வரையிலான தசாப்தத்தில் உலகெங்கிலும் தீவிரமான மக்கள் இயக்கங்கள், சர்வாதிகாரத்துக்கு எதிராகவும், குடியுரிமை சட்டத்திற்காகவும், அநியாய சட்டங்களுக்கு எதிராகவும், மாற்றத்தைக் கோரும் வகையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தன.  ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் தாக்கியதிலிருந்து இந்தியா, லெபனான், சிலி, ஹாங்காங், ஈராக், அல்ஜீரியா மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு இடங்களில் நடந்து வந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மற்றும் உள்ளிருப்பு போராட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
போராட்டங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக மக்கள் சக்தி  குறைந்து விட்டதாக கருதமுடியாது.  இந்த நெருக்கடிக்கு மத்தியில் மாற்றத்திற்காவும், அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகவும் மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த பயன்படுத்திய பல்வேறு போராட்ட முறைகள் குறித்த தரவுகளை நாம் கவனித்த பொழுது கிட்டத்தட்ட 100 தனித்துவமான வன்முறையற்ற முறைகளை மக்கள் பயன்படுத்தியதை அடையாளம் காண முடிகிறது. மக்கள் ஆதரவு பெற்ற சமூக இயக்கங்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஒரு வட்டத்திற்குள் முடங்கிவிடாமல் தொற்றுநோய்  மற்றும் அதை ஒழிப்பதற்கான அரசாங்கங்களின் செயற்பாடுகளில் புதிய கருவிகள், புதிய உத்திகள் மற்றும் மாற்றத்தைத் தூண்டி அதன் மூலம் பல உயிர்களை காப்பதில் முன்னணியில் நிற்கின்றன.
மேலும் உலகெங்கிலும், மக்கள் கார்களில் போராட்ட வாசகங்களை எழுதியும், வீட்டிற்குள் இருந்து கொண்டு பாத்திரங்கள் மூலம் ஒலி எழுப்பியும், நேரலையில் அறிக்கைகளை வெளியிட்டும், டிஜிட்டல் பேரணிகள், டிஜிட்டல் போராட்டங்கள், கற்பித்தல் மற்றும் தகவல் பகிர்வு மூலம் ஆன்லைனில் தங்கள் செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வாஷிங்டன் போஸ்ட் சமீபத்தில் வெளியிட்ட செய்தியில் பல சமூக ஆர்வலர்கள் தங்கள் போராட்டங்களை ஆன்லைன் வேலைநிறுத்தங்கள் மற்றும் தங்கள் கோரிக்கைளை ட்வீட் புயல்கள் (Tweet Storm) மூலம் தெரிவித்து வருவதையும் தங்கள் போராட்டம் குறித்தான வலைத்தளங்களை உருவாக்கியதையும் குறிப்பிட்டது. இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இயக்கங்கள்  உலகளாவிய முழுஅடைப்பு முடிவுக்கு வந்தவுடன் தங்களுடைய தாக்கம் மற்றும் சமூக மாற்றம் ஏற்படுத்தும் திறனிலும், பெரிய அளவிலான வளர்ச்சியை பெற்றிருப்பார்கள். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மக்கள் சக்தி முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் உலகளாவிய நெருக்கடிக்கு ஏற்றவாறு வளர்ந்து வருகிறது. கூட்டு படைப்பாற்றல் (Collective Creativity)  என்பது காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை தகவமைத்து கொள்கிறது.  நெருக்கடிநிலை பெரும்பாலும் புதிய யோசனைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கும். இத்தகைய வளர்ந்து வரும் திறமை மற்றும் விழிப்புணர்வின் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும் என்று கணிக்க இயலாது என்றாலும், மக்கள் சக்தி குறையவில்லை என்பது தெளிவாகிறது. அதற்கு பதிலாக, உலகெங்கிலும் உள்ள இயக்கங்கள் தொலைதூர ஒழுங்கமைப்பிற்கு ஏற்றவாறு தங்கள் ஆதரவு தளங்களை உருவாக்குவது, அவற்றின் செய்திகளை கூர்மைப்படுத்துவது மற்றும் எதிர்காலத்திற்கான உத்திகளைத் திட்டமிடுதல் வேண்டும்.
(Source: தி கார்டியன்)

Comments are closed.