நியூசிலாந்து பள்ளிவாசிலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு வாழ்நாள் சிறை

0

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 57 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதல் பயங்கரவாத தாக்குதல்தான் என்பதை அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா உறுதி செய்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்த கொடூர காட்சிகளை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 25) கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த பிரெண்டன் டாரண்ட் கடந்த மார்ச் மாதம் நடந்த விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் அவரை குற்றவாளியாக நீதிபதிகள் அறிவித்தனர்

இந்த நிலையில் பிரெண்டன் டாரண்டுக்கு தண்டனை அறிவிப்பதற்கான வாதம் கிறைஸ்ட்சர்ச் நகர கோர்ட்டில் நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், குற்றவாளி பிரெண்டன் டாரண்ட், தாக்குதல் நடத்திய 2 மசூதிகளையும் தீ வைத்து கொளுத்தும் திட்டம் வைத்திருந்ததாகவும், 3-வது மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் பிரெண்டன் டாரண்டுக்கு அதிகபட்ச தண்டனையாக பரோலில் வெளியே வர முடியாத வகையில் வாழ்நாள் சிறை விதிக்க வேண்டும் என அரசு வக்கீல் கேட்டுக்கொண்டார்.

Comments are closed.