NIAவின் குற்றப்பத்திரிகையை நிராகரிக்க கோரி மாலேகான் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர் மனு

0

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட மாலேகான் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் நிசார் அஹமத் பிலால். இவர் இந்த வழக்கு தொடர்பான சிறப்பு நீதிமன்றத்திடம் சாத்வி பிரக்யா சிங் மற்றும் ஐந்து பேர் குற்றமற்றவர்கள் என்று NIA கூறும் குற்றப்பத்திரிகையினை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளை NIA மறு விசாரணை செய்ய அவசியம் ஏதும் இல்லை என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வுத்துறை கூடுதல் ஆதாரங்களை தேட எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்றும் ஆனால் முந்தைய குற்றப்பத்திரிகையில் உள்ள முரண்களை தேடும் முயற்சியில் மட்டும் தான் ஈடுபட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த மனு வருகிற ஜூன் 10 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

கடந்த மே 13 ஆம் தேதி தேசிய புலனாய்வுத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சாத்வி பிரக்யா சிங் மற்றும் ஐந்து நபர்களை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்திருந்தது.மேலும் இந்த குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மீது போடப்பட்டிருந்த Maharashtra Control of Organised Crime Act எனும் சட்டத்தையும் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.