NIAவின் கூற்றுக்கள் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது: கர்கரேவுடன் பணியாற்றிய அதிகாரிகள்

0

2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரேவுடன் விசாரணை செய்து கர்னல் புரோஹித் மற்றும் சாத்வி பிரக்யா சிங் முதலியோரை கைது செய்த தீவிரவாத தடுப்புப்படை அதிகாரிகள் தற்பொழுது இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வுத்துறை ( NIA) வெளியிடும் தகவல்கள் சந்தேகத்திற்கு இடமானவை என்று கூறியுள்ளனர்.

NIA வின் கூற்றுப்படி மாலேகான் குண்டு வெடிப்பை முதலில் விசாரணை செய்த தீவிரவாத தடுப்பு படை (ATS ) வேண்டுமென்றே RDX ஐ வைத்து பின் அதனை குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றியிருக்கலாம் என்று கூறியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ATS அதிகாரிகள், தற்பொழுது இந்த வழக்கு தேசிய புலனாய்வுத்துறையிடம் இருக்கின்றது என்றும் அதனால் இது குறித்து விரிவாக பதிலளிக்க விரும்பவில்லை என்றும் கூறிNIA கூறவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் தங்களின் தலைவர் ஹேமந்த் கர்கரே தற்பொழுது தங்களுடன் இல்லை என்றும் நாங்கள் அவரது விசாரனையை நம்புகின்றோம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், எங்களிடம் விசாரணை இருந்தவரை நாங்கள் அதனை நியாயமாக விசாரணை செய்தோம் என்றும் தற்பொழுது கர்கரே உயிருடன் இல்லாதபோது அவரின் விசாரணையை குறை காண்பது நியாயமானது அல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க நாங்கள் கடுமையாக உழைத்தோம் என்றும் கிடைத்த ஆதாரங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த விசாரணையில் பங்குபெற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொலைபேசி உரையாடல்கள், சதி கூட்டங்கள், பண பரிமாற்றம் ஆகியவை குற்றவாளிகளுக்கு எதிரான உறுதியான ஆதாரங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முன்னதாக பணியாற்றி பின் பல துறைகளுக்கு மாற்றப்பட்ட பல அதிகாரிகளும் இந்த வழக்கை கவனித்து வருகின்றனர். புரோஹித்தை கைது செய்வதற்கு முன் மூத்த பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆதாரங்களை பார்த்து திருப்தி அடைந்த பின்னரே கைது செய்தோம் என்றும் தற்பொழுது விசாரணை NIA விடம் உள்ளது என்றும் அவர்கள், அவர்கள் விரும்பியவற்றை செய்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கின் இன்றைய நிலை குறித்து பல அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். இன்னும் இந்த வழக்கை விசாரித்த சிறப்பு வழக்கறிஞர் ரோகினி சாலியான், NIA அதிகாரிகள் மாலேகான் வழக்கு விசாரணையில் மென்மைப்போக்கை கடைபிடிக்குமாறு கூறியதாக புகார் தெரிவித்திருந்தார். (படிக்க: செய்தி) தற்பொழுது தன்னை அவ்வாறு கூறிய அதிகாரி தேசிய புலனாய்வுத்துறையின் மும்பை பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சுஹாஸ் வார்க்கே என்று தெரிவித்துள்ளார்.

மறைந்த தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே தலைமையில் நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையில் முதல் முதலாக வலது சாரி இந்து அமைப்புக்களுக்கு தொடர்பிருகின்றது என்ற உண்மை தெரியவந்தது. இது சில அரசியல் கட்சிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தின என்று கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்: மாலேகான்

Comments are closed.