கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்!

1

கோடி கணக்கில் போலி பணம் கொள்ளையடித்ததாக தேசிய புலனாய்வு அமைப்பைச் (NIA) சேர்ந்த ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கான்ஸ்டபிள் ஆவார்.

NIA என்ற தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் போலி பணம் திருடியதற்காக  டெல்லி காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். திருடப்பட்ட போலி பணத்தின் மதிப்பு ரூபாய் 1.2 கோடி என தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், போலி பணம் ரூபாய் 1.2 கோடி NIA அறையிலிருந்து காணாமல் போனது. பின்னர் CCTV கேமராவை சோதனை செய்து பார்த்ததில் NIA ஊழியர்களே அந்த அறையை உடைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

அந்த பணம் முழுவதும் போலி என தெரியாமல், உண்மையான பணம் என கருதி திருடிவிட்டதாக திருடியவர்கள் தெரிவித்தனர்.

டெல்லி, குர்கான் நகரில் சோதனையிட்ட NIA அதிகாரிகள், திருடப்பட்ட போலி பணம் ரூபாய் 1.2 கோடியை கண்டுபிடித்தனர்.

Discussion1 Comment

  1. போலி பணத்திற்கும் உண்மை பணத்திற்கும் வித்யாசம் தெரியாத அதிகாரிகள் தான் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பாங்க , நம்புங்க சார்