நைஜிரிய பள்ளிவாசலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

0

நைஜிரியாவின் ஜம்பரா மாநிலத்தில் உள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் கடத்தப்பட்டதாக நைஜீரியா காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பள்ளிவாசலின் இஸ்லாமிய அறிஞர் ஒருவரும் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். மேலும் பள்ளிவாசலில் இருந்தவதளை துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் முஹமது தெரிவித்தார்.

துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் தப்பிவிட்டதால். அவர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Comments are closed.