இந்தியாவால் தேடப்பட்ட நீரவ் மோடி கைது

0

வங்கி கடன் மோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நீரவ் மோடியை லண்டன் போலீஸார் இன்று கைது செய்தனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர் நீரவ் மோடியும், அவரது உறவினரான முகுல் சோக்ஷியும் பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் அரசின் உள்துறை அமைச்சகத்திடம் அமலாக்க துறை வேண்டுகோள் விடுத்தது.

இந்த நிலையில், நீரவ் மோடியை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று லண்டன்  நீதிமன்றம் நேற்று முன்தினம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவரை லண்டன் போலீஸார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

Comments are closed.