பாஜக ஆட்சியில் ரூ.95,760 கோடி வங்கி மோசடி: ஒப்புக்கொண்ட நிர்மாலா சிதாராமன்

0

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த காலங்களில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 95 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், “ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவலின் படி, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 6 மாதத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரத்து 743 வங்கி மோசடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் மட்டும் சுமார் 95 ஆயிரத்து 760.49 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது, மேலும் செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களில் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Comments are closed.