“பாஜகவுக்கு பொருளாதார கொள்கையும் இல்லை, தொலைநோக்கு பார்வையும் இல்லை”- நிர்மலா சீதாராமனின் கணவர்!

0

இந்தியாவின் பொருளாதாரத்திலும், நாட்டின் வளர்ச்சியிலும் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகல பிரபாகர் தி இந்து ஆங்கில நாளிதழில் பொருளாதாரம் தொடர்பாக கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்.

அதில், “இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை பா.ஜ.க அரசு மறைத்து வருகிறது. நாட்டின் பலம் வாய்ந்த கட்சியாக மத்தியில் ஆட்ச்சி செய்ய்யும் பா.ஜ.க, தன்னுடைய பொருளாதார கொள்கைகளால் அது தோல்வியையே சந்தித்துள்ளது. ஆனால் இந்த நிலையை உணராமல் தேவயற்ற மறுப்பை மட்டுமே பா.ஜ.க கூறி வருகிறது.

பா.ஜ.கவினருக்கு என ஒரு தெளிவான பொருளாதார கொள்கை என்பதே இல்லை.
தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் நரசிம்ம ராவ் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் பாஜக இந்த சமயத்தில் அரசுக்கு உதவக்கூடும்.
சவால்களையும், கருத்துகளையும், விமர்சனங்களையும் ஏற்றக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் பா.ஜ.க அரசுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை” என்று பரகல பிரபாகர் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.