நிதி ஆயோக்கில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் ராஜினாமா: தொடர்ச்சியாக பதவி விலகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!

0

நிதி ஆயோக்கில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி காஷிஷ் மிட்டல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி காஷிஷ் மிட்டல். என்ஐடிஐ ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமாரின் கூடுதல் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது அருணாச்சல பிரதேசத்திற்கு பணிநிலை அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு முன்பும் காஷிஷ் மிட்டல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் நாட்டில் சுதந்திரமாக தனது கருத்தைக் கூட தெரிவிக்க முடியவில்லை எனக்கூறி பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீது மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் பின்னர் “ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு சமரசத்திற்கு பலியாகிறது” எனக்கூறி கர்நாடகாவைச் சேர்ந்த துணை ஆணையர் சசிகாந்த் செந்தில் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.