நாட்டில் இதுவரை ஏற்படாத பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்!

0
கடந்த 70 ஆண்டுகளில் இத்தகைய பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை என நிதி ஆயோக்  துணை தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
செய்தி நிறுவனத்திற்கு, நிதி ஆயோக்  துணைத்தலைவர் ராஜீவ் குமார்  கூறியதாவது:
“கடந்த 70 ஆண்டுகளில் இந்த வகையான பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை. நிதித்துறை முழுவதும் சிக்கலில் உள்ளது. தனியார் துறையின் சில அச்சங்களை அகற்ற மத்திய அரசு  தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.
இதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, நீங்கள் சாதாரணமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க வேண்டிருக்கும். இரண்டாவது, தனியார் துறையினருக்கான சில அச்சங்களை அகற்ற அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்.
குறைந்த நுகர்வு, பலவீன முதலீடுகள் மற்றும் குறைவான செயல்திறன் கொண்ட சேவைத்துறை காரணமாக நடப்பு நிதியாண்டின் உற்பத்தியின் வளர்ச்சி வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது.

Comments are closed.