நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை வெளியிட்டார் சீமான்

0

நாம் தமிழர் கட்சி போட்டியிடும்  மக்களவை தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை சீமான் வெளியிட்டார்.

தேர்தல் ஆணையத்திடம், சீமான் விவசாயம் தொடர்பான சின்னைத்தை எங்களின் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதன் தொடர்பாக கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

சென்னையில்  தமது கட்சி சின்னத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் சீமான் கூறியதாவது, இந்த தேர்தலில் நமது கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைத்துள்ளது. மேலும் வரும் 23ஆம் தேதி, நாம் தமிழர் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் உடைய பட்டியல் வெளியிடப்படும் என்றும் அதில் 20 ஆண் மற்றும் 20 பெண் வேட்பாளர்கள் இருப்பார்கள். இதனை தொடர்ந்து மார்ச் 25ம் தேதியிலிருந்து தேர்தல் பரப்புரை தொடங்குவதாக அவர் கூறினார்.

Comments are closed.