ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி முஸ்லிம்கள் மீது தாக்குதல்: உ.பி. காவல்துறை அராஜகம்

0

உத்தர பிரதேச மாநிலம் முஜாஃபர் நகரில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியதாக கூறி கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை உ.பி காவல்துறை விடுவித்ததுள்ளது.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியதாக கூறி இஸ்லாமிய பல மாணவர்களை உத்தர பிரதேச போலிஸார் கைது செய்துள்ளனர். கொலை முயற்சி, கிரிமினல் சதி, அரசு ஊழியர்கள் மீது குற்றவியல் சக்தியை பயன்படுத்துதல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களில் நான்கு பேரை குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 பிரிவு 169 கீழ் விடுவித்தனர். மேலும் அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரியவந்தது.

இது குறித்து வழக்கறிஞர் கம்ரான் ஹஸ்னைன் தெரிவிப்பதாவது, “காவல்துறையினர் FIRஇல் 108 பேரை பெயரிட்டிருந்தனர். இப்போது 10 மாணவர்கள் எதிரான இந்திய தண்டனைச் சட்டத்தின் 188வது பிரிவு தவிர அனைத்து குற்றச்சாட்டுகளையும் காவல்துறையினர் வாபஸ் பெற்றுள்ளனர். ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் மாணவர்கள் மீது ஏன் இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன என்பதை முசாபர்நகர் மூத்த போலீஸ் அதிகாரி அபிஷேக் யாதவ் விளக்கவில்லை” என்றார்.

இந்நிலையில் டிசம்பர் 20 அன்று மாணவர்களை காலவ்துறையினர் கைது செய்தனர். குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்னரே அப்பாவி மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட மாணவர் கூறுகையில், “காவல்துறை அதிகாரிகள் எங்களை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழங்குமாறு மிரட்டினர். நாங்கள் மறுத்தபோது, ​​அவர்கள் எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை கூறினர். நாங்கள் நோன்பு வைத்திருந்ததால் தண்ணீர் கேட்டோம். ஆனால் அவர்கள் தர மறுத்தனர்” என்று அவர் கூறினார்.

Comments are closed.