எவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றாலும் CAA சட்டம் திரும்ப பெறப்படாது- அமித்ஷா

0

CAA சட்டத்திற்கு ஆதரவாக உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடைபெற்ற பேரணியில் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது:

நாட்டில் CAAவுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் தவறானது. குடியுரிமையை பறிக்கும் என்பதெல்லாம் CAA சட்டத்தில் இல்லை. எவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றாலும், அச்சட்டத்தை திரும்ப பெறப்போவதில்லை.

ராகுல் காந்தி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி ஆகியோரின் பெயா்களை குறிப்பிட்ட அமித்ஷா, “CAA குறித்து பொது வெளியில் என்னுடன் விவாதிக்க தயாரா? என சவால் விடுகிறேன். இந்த சட்டத்தில் முஸ்லிம்களின் குடியுரிமை பறிப்போகும் போன்ற திட்டங்கள் இருந்தால் அவர்கள் என்னிடம் தெரிவிக்கலாம்” என்றார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராடங்கள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், இவ்வாறு அமித்ஷா தெரிவித்துளார்.

குடியுரிமை திரும்ப பெறும் வரை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் CAA சட்டத்தௌ எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.