புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் இல்லை: எனவே இழப்பீடும் இல்லை

0

கொரோனா முழு முடக்க காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்தது குறித்து எவ்வித தகவல்களும் அரசிடம் இல்லை. எத்தனை தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள் என்பது அரசுக்கு தெரியாது. எனவே அவர்களுக்கான இழப்பீடு அல்லது நிவாரணம் வழங்க எந்த அவசியமும் இல்லை என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக நாடு தழுவிய முழு முடக்கம் விதிக்கப்பட்டது. அதிலிருந்து மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களளுக்கான இழப்பீடுகள் குறித்தும் மத்திய பாஜக அரசிடன் கேள்விகள் எழுப்பப்ட்டது.

1 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வந்ததாக அமைச்சகம் ஒப்புக்கொண்ட மத்திய அரசு, தனது எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய தொழிலாளர் மந்திரி சந்தோஷ்குமார் கங்வார், “இதுபோன்ற விவரங்கள் எதுவும் பராமரிக்கப்படவில்லை. மேற்கண்டவற்றை கருத்தில் கொண்டு கேள்வி எழவில்லை” என்றும் கூறியுள்ளார்.

“பூட்டப்பட்ட காலத்தில் எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தனர்.? எத்தனை வேலைகள் இழந்தன என்பது மோடி அரசுக்குத் தெரியாது. நீங்கள் கணக்கிடவில்லை என்றால், இறப்புகள் நடக்கவில்லையா? அரசால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது கவலையளிக்கிறது. அவர்கள் இறந்தது உலகத்திற்கு தெரியும். எந்த தகவலும் தெரியாத ஒரு அரசாக மோடி அரசு உள்ளது ”என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ட்வீட் செய்துள்ளார்.

Leave A Reply