முஸ்லிம் சமூகத்தை மட்டும் புறக்கணித்து குடியுரிமை வழங்கும் பாஜகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது- சசி தரூர்

0

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத ரீதியிலான அடக்குமுறைகளை தொடா்ந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்க, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவிதுள்ள, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், “ஒரு சமூகத்தை (முஸ்லிம்) மட்டும் புறக்கணிக்க மத்திய பாஜக அரசு விரும்புகிறது. மற்ற சமூகத்தினருக்கு அடைக்கலம் அளிக்கப்படும்போது, ஒரு சமூகத்திற்கு மட்டும் அடைக்கலம் மறுக்கப்படுகிறது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கொள்கைகளின் மீறலாகும். இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டாலும், அரசமைப்பு சட்ட விதிமீறலை உச்சநீதிமன்றம் அனுமதிக்காது என்ற நம்பிக்கை உள்ளது.

மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கம் மட்டுமே பாஜக அரசுக்கு உள்ளது. மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது, ‘இந்துத்துவ பாகிஸ்தானாக’ இந்தியாவை மாற்றிவிடும். அந்த மசோதா ஒரு குறிப்பிட்ட சமூகத்தினா் மத்தியில் அச்சமான சூழலையும், பாகுபாட்டையும் உருவாக்கும்” என்றாா் சசி தரூா்.

Comments are closed.