பாராட்டைவிட நிதிதான் தேவை: மத்திய அரசுக்கு கேரள நிதியமைச்சர் வேண்டுகோள்

0

தற்போது ஊரடங்கு வரும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.முன்னதாக ஊரடங்கை முன்னிட்டு மத்திய அரசு கூடுதலாக ரூ. 230 கோடி ஒதுக்கியது. ஆனால் கொரோனா பரவலை தடுக்கவும், பாதிப்புகளை முறைப்படுத்தவும் கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு மத்திய அரசு காது கொடுத்து கேட்க வேண்டும் என்று கேரள நிதியமைச்சர் ஜசக் தாமஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவலில் இரண்டாவது இடத்தில் இருந்த கேரள அரசு முறையான நடவடிக்கையால் பின்தள்ளப்பட்டு உள்ளது. வைரஸ் இல்லாத முதல் மாநிலமாக கேரள அரசு மாறும் என்றும் கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தப்படி விரைவாக செயல்பட்டதால் இந்த நிலையை எட்ட முடிந்தது.

இப்போது காலத்தின் தேவையை உணர்ந்த அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் உடனடியாக வீடியோ கான்ஃபெரன்ஸ் கூட்டத்தை நடத்த வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் இருந்து அதிக பணம் கடன் வாங்கி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க எங்களுக்கு நிதி தேவைப்படுகிறது என்றார்.

பொருளாதாரம் மோசமாகி வருவதால் பெரும் சீரழிவை சந்திக்கும் முன் அதை சரி செய்ய வேண்டி உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

அண்டை மாநிலங்களில் இன்னும் பாதிப்பு குறையவில்லை. ஆகையால் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது. சிங்கப்பூரில் பாதிப்பு குறைந்ததும் ஊடரங்கை தளர்த்தியதன் விளைவே மீண்டும் அதிகரித்து விட்டது. எனவே நாங்கள் கவனமாக இருக்கிறோம் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே கே ஷைலஜா கூறியுள்ளார்.

Comments are closed.