2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..!

1

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில், லதூர் மற்றும் பலூஸ் ஆகிய 2 தொகுதிகளில் நோட்டாவிடம் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

திராஜ் தேஷ்முக், மொத்தம் பதிவான 1 லட்சத்து 99 ஆயிரத்து 599 வாக்குகளில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 615 சுமார் 67.59 சதவிகிதம் வாக்குகளை பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் சச்சின் என்ற ரவி தேஷ்முக் சுமார் 13 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இத்தொகுதியில் நோட்டா 27 ஆயிரத்து 500 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதைபோல பலூஸ் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வஜீத் கதாம், மொத்த வாக்குகளில் 1 லட்சத்து 71 ஆயிரம் 83.04 சதவிகிதம் வாக்குகளைப் பெற, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனா வேட்பாளருக்கு வெறும் 8 ஆயிரத்து 976 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

இங்கு நோட்டா பெற்றது 20 ஆயிரத்து 631 வாக்குகள் ஆகும். இவ்வாறு லதூர் மற்றும் பலூஸ் தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்றது, சிவசேனா – பாஜக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Discussion1 Comment