டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல்துறை வெறியாட்டம்!

0

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழகத்தின் மாணவர்கள் இரண்டு நாட்களாக போராட்டத்தி வருகின்றனர். அதேபோல் அமைதியாக தொடங்கிய போராட்டம்  பெரும் வன்முறையாக மாறியுள்ளது.

இந்த வன்முறைக்கு போலிஸாரே காரணம் என மாணவர்கள் தரப்பினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நேற்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மீது போலிஸார், தடியடி நடத்தி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதனால் சிறிது நேரத்தில் வன்முறை வெடித்தது. பெண்கள் என்றும் பாராமல் அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது காவல்துறை.

அவ்வாறு மாணவர்களை, காவல்துறை தாக்கும் வீடியோக்களை சமுக வலைள்த்தில் பதிந்துள்ளனர். இந்நிலையில் வளாகத்திற்குள் புகுந்த போலிஸார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கி சூடு நடத்துவதும் தெரியவந்துள்ளது.

மேலும் போலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டில் பல்கலைக்கழக கழிவறையில் சில மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஒரு மாணவர்கள் மீது கோலிசார் துப்பாக்கிசூடும் நடத்தினர். அதில் இரு மாணவரின் கால் பகுதியில் தூப்பாக்கி குண்டும் பாய்ந்துள்ளது.

போலிஸார் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றன. மேலும், போலிஸார் பல மாணவர்களை கைது செய்தும் உள்ளனர்.

இஸ்லாமிய மாணவர்கள் மீது காவல்துறை நடத்தும் இந்த வன்முறை வெறியாட்டம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவா அமைப்பினர் ஊடுவி மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாகவும் பல்கலை கழக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Comments are closed.